அடுத்த கூட்டம் தஞ்சையில் வைத்திலிங்கத்திற்கு செக் வைக்க காத்திருக்கும் எடப்பாடி அணியினர்.. பரபரப்பு தகவல்கள்..

0

அதிமுக இரண்டாக பிரிந்து எடப்பாடி அணி என்றும், ஓபிஎஸ் அணி என்றும் நகர்ந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். இந்நிலையில் கட்சியின் நடந்த அனைத்து பிரச்சனைகளும் அனைத்து தரப்பிற்கும் தெரியும். தன்னுடைய பலத்தை நிலை நாட்ட இரு தரப்பினரும் முயற்சி எடுத்து வருகின்றனர் அதில் ஒரு பகுதியாக நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியினர் கொடுத்த ஆதரவு இன்று பல்வேறு அரசியல் கட்சிகளிடையே பெருத்த விவாதமாக வலம் வருகிறது. ஓபிஎஸ் அணி மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த கூட்டம் என்று கூட சொல்லலாம்.

திரண்ட கூட்டம்

திண்டுக்கல்லில் பெரும்பாலும் கூட்டங்கள் நடத்தினால் பெரிய அளவில் தொண்டர்கள் சேர்வது கிடையாது என்ற சொல் நிலவி வந்த நிலையில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் என மூவரும் சேர்ந்து ஒரு பெரும் கூட்டத்தைக் கூட்டத்தை கூட்டி இன்று எடப்பாடி பழனிச்சாமி மாஸை உயர்த்தி வைத்திருக்கிறனர். அதேபோல ஓபிஎஸுக்கு பயத்தை காட்டியது போல அடுத்ததாக தஞ்சையில் வைத்திலிங்கத்திற்கு ஒரு பயத்தை காட்ட வேண்டும் தன்னுடைய சக்தியை நிலைநாட்ட வேண்டும் தஞ்சையில் வைத்திலிங்கம் ஒரு பொருட்டே கிடையாது என்பதை உணர்விக்க வேண்டும்.

வைத்திலிங்கம் இல்லாத டெல்டா எப்படி இருக்கும் என்பதை கடந்த ஆர்ப்பாட்டத்தில் காட்டினர் எடப்பாடி அணியினர் அதை மிஞ்சும் வகையில் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து வந்து தஞ்சையில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை அல்லது ஆர்ப்பாட்டத்தை அல்லது கவனயீர்ப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் அதுவும் தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் கூட்டத்தை சேர்க்க வேண்டும் என டெல்டா பிரமுகர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது. இங்கு கூட்டம் கூடினால் வைத்திலிங்கத்தின் மாஸ் என்பது அதல பாதாளத்திற்கு சென்று விடும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி கட்சி பிரிந்தற்கு பிறகு தஞ்சைக்கு வரும் முதல் ப்ரோக்ராம் என்பதால் மிகப்பெரிய கெத்தை காட்ட எடப்பாடி அணியினர் தயாராகி வருவதாகவும் தகவல்கள் கசிந்து இருக்கிறது. வைத்திலிங்கம் என்ன செய்யப் போகிறார் .? எடப்பாடி அணியினரின் அடுத்த மூவ் என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தி – தமிழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here