தஞ்சை மாதா கோட்டை பைபாஸ் சாலையில் இன்று மாலை ஒரே குடும்பத்தில் மூன்று பேர் பலியான சோக சம்பவம் இன்னும் அடங்குவதற்குள் தஞ்சை கோடியம்மன் கோவில் அருகே அரசு பேருந்து பின்னோக்கி சென்று பொதுமக்கள் மீது ஏறி இறங்கியதால் மொத்தம் ஐந்து பேர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். அனைவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், காமாட்சி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தஞ்சை மக்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.