`அடுத்தடுத்து இறந்த 11 கொரோனா நோயாளிகள்!- செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் `ஷாக்’

0

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் 11 பேர் நள்ளிரவில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை மாவட்ட கலெக்டர் மறுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 21,000 கடந்துள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை 12,49,292 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,25,230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி ஆயிரத்து 500க்கும் மேற்போட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், இந்நிலையில் நேற்று இரவு பத்து மணி முதல் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டு மருத்துவனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் அதனாலேயே தனது தந்தை உயிரிழந்துவிட்டதாகவும் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் கூறுகையில், ‘மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here