`அஜய் மிஸ்ராவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்!’- ஜனாதிபதியிடம் ராகுல் காந்தி வலியுறுத்தல்

0

குடியரசுத் தலைவரை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு சந்தித்துள்ளது. அப்போது, லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உத்தரபிரதேச மாநிலம், லக்கீம்பூர் கேரியில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்த வழக்கில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கடந்த 9ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலான 7 பேர் கொண்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துள்ளது. காங்கிரஸ் பிரதிநிதிகள் கூட்டத்தில் மூத்த தலைவர்கள் கார்கே, ஏ.கே.அந்தோனி, குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அப்போது ஒன்றிய உள்துறை இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரம் தொடர்பாக இன்றே ஒன்றிய அரசுடன் கலந்துரையாடுவதாக ஜனாதிபதி தங்களுக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருக்க நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். லக்கிம்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அஜய் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்காதவரை விசாரணை நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் லக்கிம்பூர் விவகாரத்தை விசாரிக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here